எம் தாயும்; எந்தையும்; தமிழும் தந்த கொடை நான்; என் நாவிருந்து ஆட்சி செய்து, எண்ணமெல்லாம் நிறைந்து, நினைத்தபோது தங்கு தடையின்றி என் வார்த்தைகளுக்கு வளம் கொடுக்கும் தமிழே, இங்கு வருவோர் அள்ள; அள்ளக் குறையாத, தீந்தமிழ் தேன் பருகி, தென்றலில் தவழ்ந்து, எண்ணமெல்லாம் ஏற்றம் பெற்று, பாரினிலே பலர் மெச்ச வாழ்ந்திடுவர் நாளுமே! நண்பர்களே, நான் இலக்கணம் கற்றவன் அல்ல. புத்தகங்கள் படிப்பவனும் அல்ல; ஆதலால், சொற்பிழை, பொருட்பிழை இருப்பின் தயங்காமல் என்னை, மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
May 30, 2015
May 28, 2015
May 27, 2015
May 26, 2015
May 25, 2015
May 24, 2015
May 20, 2015
May 19, 2015
May 17, 2015
May 16, 2015
May 14, 2015
May 12, 2015
வள்ளுவ மாலை
திருக்குறள் ஓதுவீர் ஓங்கும் புகழெய்த
ஓடும் மனதிற்குப் போடும் கடிவாளம்
தேடும் அறிவிற்கோர் ஏற்றம் - வருமொரு
தீதும் அகற்றிடும் நூல்!
நூல்பல தேடிப் படித்தாலும் வாரா
தெளிதமிழ் சிந்தனை ஏகும் - திருக்குறள்
வாழ்வில் தரும்நலம் யாவும்! - அதன்வழி
நில்
மானுடம் போற்ற சிறந்து!
வெல்லும் செயல்யாவும் சொல்லும் வழிநி
ற்க
உள்ளும் புறமும் தீதறுநல் லின்பமும்
மாற்றானும் வாழ்த்திட நாளும் - பெருகிடும்
மாண்பும் திருக்குறள் பண்பு!
நீடில்லா வாழ்சேர் நிலமும் - ஆக்கும்
நிதம்பல செல்வமும் யார்கொண்டு செல்வர்?
தகுமென வாழா மனத்தினன்- தெய்வத்
திருக்குறள் ஓதல் சுகம்!
நானென் செயவென நோகாமல் நாளும்
நவில்வாய் திருக்குற ளொன்றை - அதுதரும்
நன்னெறி பற்றிடத் தெருவோர் போற்றும்
நாயகன் நீயாவாய் நம்பு!
அன்புடன்
சுரேஜமீ
May 10, 2015
அன்னையர் தினம்?
அன்னையர் தினம் என்று அன்னியன் வைக்கின்றான்;
அதற்கும் நாமெலாம் அடிபணிந்து நிற்கின்றோம்!
அன்னைக்கு ஏதொரு தினம்?
அனுதினமும் அவள்தினம்தான்!
அதற்கும் நாமெலாம் அடிபணிந்து நிற்கின்றோம்!
அன்னைக்கு ஏதொரு தினம்?
அனுதினமும் அவள்தினம்தான்!
அன்னை தந்தை வளர்த்தெடுத்தார்
அவனியில் நாம் மகிழ்கின்றோம்!
அவர்தம்மை பிரிந்திருத்தல்
நாம் செய்த பாவமன்றோ!
அவனியில் நாம் மகிழ்கின்றோம்!
அவர்தம்மை பிரிந்திருத்தல்
நாம் செய்த பாவமன்றோ!
அவர்தம்மை பார்த்திருத்தல்
அன்னவரின் பெருமையன்றோ!
அதுகிடைக்கா எதுகிடைத்தும்
அருளில்லை இவ்வுலகில்!
அன்னவரின் பெருமையன்றோ!
அதுகிடைக்கா எதுகிடைத்தும்
அருளில்லை இவ்வுலகில்!
பெற்றவரைப் போற்றிடுவர்
பேரெல்லாம் பெற்றிடுவர்
பெருமைபட வாழ்ந்திடுவர்
பெருகிவரும் செல்வமெலாம்!
பேரெல்லாம் பெற்றிடுவர்
பெருமைபட வாழ்ந்திடுவர்
பெருகிவரும் செல்வமெலாம்!
வாழ்த்துதற்கு நாமென்ன வானவரா?
வணங்கிடுங்கள் தெய்வமதை
வளர்நாளும் வரலாறாய்
வாழ்ந்திடுங்கள் வாழ்த்துக்களால்!!
வணங்கிடுங்கள் தெய்வமதை
வளர்நாளும் வரலாறாய்
வாழ்ந்திடுங்கள் வாழ்த்துக்களால்!!
- சுரேஜமீ
May 9, 2015
சிற்பங்கள் சொல்வதென்ன?

எண்ணக் கருவாக்கி
எனக்கோர் உருவமிட்டு
வண்ணக் கனவுகளை
வார்த்து எடுக்கின்றாள்!
வாழும் வாழ்வினிலே
வந்துபோகும் எண்ணமெலாம்
வாழ்ந்தால் வரலாறு
வீழ்ந்தால் வரும்நாளும்!
மனங்கள் ஒன்றாக
மணலே சாட்சியாக
மன்னன் துணையாக
மங்கை மகிழ்வாக
மண்ணின் சிற்பங்கள்
சொல்லும் சேதியென்ன?
வாழ்வில் இருபக்கம்
வசந்தம் ஒருபக்கம்
வாடும் மறுபக்கம்
வளைத்துப் பழகிக்கொள்!
வாழ்வே சுகமாகும்
வளர்தமிழ் தினம்படித்து
வள்ளுவம் ஏகிடுவாய்
வாழ்வின் நெறிவிளங்கும்!
துருவ முனைபோல
இருதிசை இருந்தாலும்
ஒருமுகம் பார்த்திருக்க
உறவும் பெருகிடுமே!
அலைகள் அழித்துவிடும்
அழகிய எனைக்கூட!
அதற்கென அழுவதில்லை
அழகாய்ச் சிரித்திடுவேன்!
அழிவினை நினைத்திருந்தால்
ஆக்கமும் வந்திடுமோ?
ஊக்கமும் கொண்டிடுவாய்
ஏக்கங்கள் தொலைந்திடுமே!
வாணும் வையகமும்
வானவர் போற்றுதலும்
வளைக்கரம் பெற்றிடவே
வான்புகழ் கொண்டிடவே!
நாயகன் மனமாறி
நங்கையின் முகம்பார்க்க
நற்துணை யாயிருந்து
நயமுடன் வாழ்வதற்கு!
நானும் உருப்பெற்றேன்
நாழிகை வரம்பெற்றேன்
நானிலம் பார்த்துவிட்டேன்
நானுனைச் சேர்ந்தும்விட்டேன்!!
கலையென மகளிருக்க
கண்ணிலும் மறைத்திருக்க
காட்சியும் தெரியலையோ
காளையின் மனதிற்கு?
கருத்தாய் எழுந்துவிடு
காலமும் கரம்சேர்த்து
கலைநிகர் படைப்பதற்கு
கன்னியும் இருக்கின்றாள்!
கணத்தினில் மறந்துவிடு
கடந்தன துன்பமெலாம்
கடலலை கரைக்குமுன்னே
கண்கவர் சிலையெனைப்பார்!
கன்னியின் துணையாலே
கண்டிட்டேன் இன்பம்யான்
காத்திரு உனக்குமவள்
கலைநிகர் வார்த்தெடுப்பாள்!
நம்பிக்கை கொண்டெழுவாய்
நாயகி கைகோர்ப்பாய்
நாளையும் வந்திடுவாய்
நானுனில் கலந்திருப்பேன்!
மணலினின் தேடாதே
மானுடம் தேடிஎடு
காற்றினில் கலந்துவந்து
கடவுளாய் வாழ்த்திடுவேன்!!
அன்புடன்
சுரேஜமீ
May 7, 2015
வாழுகின்ற தமிழுக்கு ஒப்பாக வாழுபவன்!
வாழ்த்துக்கள் வருவதற்கு வரம்வேண்டி நிற்போர்முன்
வானவரே வலியவந்து வாழ்த்துவது கண்டவன்தான்
வையத்திலொரு கவியாம் கவிக்கெல்லாம் அரசனவன்
வாழுகின்ற தமிழுக்கு ஒப்பாக வாழுபவன்!
கூடுகின்ற கூட்டமெலாம் கூவிநிற்கும் குயில்களாக
பாடுகின்ற பாட்டெல்லாம் படைத்தவனே பகன்றதன்றோ!
தேடுகின்ற நெஞ்சமெலாம் தேடிவைத்த சொத்துமவன்
வீடுதோறும் நிறைந்திருக்கும் வீதியெல்லாம் புகழ்மணக்கும்!
அன்னைத் தமிழ்கண்ட அருமைத் தவப்புதல்வனவன்
அவன்புகழைப் பாடுதற்கு அவனியில் யார்தகுதியென்று
அவனிருந்து எடுத்ததுதான் ஆலமரமான தென்றால்
அவனுக்கும் துணைவேண்டி அடுத்தவனும் வருகின்றான்!
பாட்டெழுதி நோட்டடிக்கும் பரிதாப நிலையில்லை
பாட்டேவந்து நிற்கும் தனைஎழுது தமிழாலென்று
பாட்டவனும் புனைந்திடவே பாரெல்லாம் மகிழ்ந்திடவே
பாட்டாளி வர்க்கமெலாம் பைந்தமிழால் நனைந்ததன்றோ!
கூட்டிவரும் கூட்டமெலாம் கூண்டோடு கலைந்துவிடும்
கூடுகின்ற கூட்டமெலாம் பார்போற்ற நிலைத்துவிடும்
கலைக்கூடம் சொல்லுமிதை இவன்பெற்றார் எவரென்றே
கண்ணதாசன் வழிவந்த வாழியவன் வணங்கிடென்றே!!
வாழி வாழி கவியரசர்; வாழி வாழி கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்(பம்மல்)
வாழி வாழி காவிரியே; வாழி வாழி சுரேஜமீ!
May 5, 2015
May 4, 2015
May 3, 2015
Subscribe to:
Posts (Atom)