Apr 3, 2015

வெள்ளியின் புனிதம்!


சிலுவையில் ஒரு
வலுவை அறைந்ததனால்
எழுந்தது மீண்டும்
ஏற்றம் பெறவே!
மனிதம் துளைத்தது
மரத்தில் அடித்தது
மரணம் நிகழ்ந்தது
மானுடம் செத்தது!
வலிகளில் பிறந்தது
வழிகள்;
வாழ்த்த வந்தது
வானோர்!
உயிர்த்து எழும்
உயிர்!
வரும் ஞாயிறு
வரட்டும்!
வலிகள் விலகும்
வழிவிட்டு!!
வெள்ளியின் புனிதம்
வெளியில் வரும்!
விண்ணும் மண்ணும்
வாழ!

(இன்று புனித வெள்ளி)

No comments:

Post a Comment