எம் தாயும்; எந்தையும்; தமிழும் தந்த கொடை நான்; என் நாவிருந்து ஆட்சி செய்து, எண்ணமெல்லாம் நிறைந்து, நினைத்தபோது தங்கு தடையின்றி என் வார்த்தைகளுக்கு வளம் கொடுக்கும் தமிழே, இங்கு வருவோர் அள்ள; அள்ளக் குறையாத, தீந்தமிழ் தேன் பருகி, தென்றலில் தவழ்ந்து, எண்ணமெல்லாம் ஏற்றம் பெற்று, பாரினிலே பலர் மெச்ச வாழ்ந்திடுவர் நாளுமே!
நண்பர்களே, நான் இலக்கணம் கற்றவன் அல்ல. புத்தகங்கள் படிப்பவனும் அல்ல; ஆதலால், சொற்பிழை, பொருட்பிழை இருப்பின் தயங்காமல் என்னை, மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
//வாடகைத்தாய் பெற்றபிள்ளைகூடச் சீரோடு வாழ்ந்திருக்க, சொந்தத்தாய் பெற்றபிள்ளையோ சொந்தமின்றி, பந்தமின்றி, யாரார்க்கோ அடிமையாய் வாழ்ந்திருக்கும் அவலத்தைச் சொல்லும் திரு. சுரேஜமீயின் வரிகள்… - அன்புச் சகோதரி மேகலா இராமமூர்த்தி, வல்லமை மின்னிதழ்
ஈட்டுத்தாய் பெற்று உற்ற கருவாக்கி ஊரார் மெச்ச என் பிள்ளையென ஏந்திப் பிடித்தே ‘ஐ’ யென மகிழ்ந்திருக்க! ஒரு துணையுமின்றி நான் மட்டும் ஓடுகாலிகளின் ஔரதனாய் ….வாழ்தற்கு?
//வாடகைத்தாய் பெற்றபிள்ளைகூடச் சீரோடு வாழ்ந்திருக்க, சொந்தத்தாய் பெற்றபிள்ளையோ சொந்தமின்றி, பந்தமின்றி, யாரார்க்கோ அடிமையாய் வாழ்ந்திருக்கும் அவலத்தைச் சொல்லும் திரு. சுரேஜமீயின் வரிகள்… -
ReplyDeleteஅன்புச் சகோதரி மேகலா இராமமூர்த்தி, வல்லமை மின்னிதழ்
ஈட்டுத்தாய் பெற்று
உற்ற கருவாக்கி
ஊரார் மெச்ச
என் பிள்ளையென
ஏந்திப் பிடித்தே
‘ஐ’ யென மகிழ்ந்திருக்க!
ஒரு துணையுமின்றி நான் மட்டும்
ஓடுகாலிகளின்
ஔரதனாய்
….வாழ்தற்கு?