Apr 7, 2015

மரம் பேசியது
என்னைப் பார்
என்றும் எதிர் பார்த்ததில்லை;
எதிரியும் எனக்கில்லை!
எதற்கும் கவலையில்லை!!
எவர் தந்த விதையோ
இன்று நான் மரமானேன்;
எத்தனை இன்னல்கள்
ஏற்ற மரமாக?
செடியாய் வீழ்ந்தேனா?
வெய்யோன் கணை தாண்டி
வேண்டா புயல் தாங்கி
கொட்டும் மழை தகர்த்து
மானுடக் கண்தாண்டி
நல்லதொரு மரமாக
நானுனக்கு நிழல்தரவே
நாளும் உன்போன்றோர்
நலம்பேண என்பற்றி!
வாழும் வரை
உயிர்க்காக;
வீழும்போது
உனக்காக!!
என்னிடம் கற்றுக்கொள்!
தன்னிடமிருந்து கொடுத்தால்
தர்மம்!
தான் மடிந்து கொடுத்தால்
தானம்!
வாழும் போது உயிர்க்கு;
வீழும்போதும் உயிர்க்கென்று!

1 comment:

  1. //இக்கவிதையேயன்றி, (படத்திலிருக்கும்) குழந்தையையும், தந்தையையும் மவுனமாக்கி அருகிருக்கும் மரத்தைப் பேசவிட்டிருக்கும் புதுமைக் கவிஞர் ஒருவரையும் சந்தித்தேன். இப் புதியமுயற்சி என்னை வெகுவாய்க் கவர்ந்தது. சாதாரண மனிதனைப்போல் அல்லாமல் ஓர் மாமனிதனைப்போல் அல்லவா அந்தமரம் தத்துவங்களை உதிர்த்துள்ளது!!
    திரு. சுரேஜமியின் ’ மரம் பேசியது’ எனும் அக்கவிதையை இவ்வாரத்தின் ’பாராட்டத்தக்க கவிதை’யாய்ச் சுட்ட விரும்புகிறேன்.// அன்புச் சகோதரி மேகலா இராமமூர்த்தி, வல்லமை மின்னிதழ்

    அம்மரம் பேசியதை நாமும் செவிமடுப்போம்…

    …எவர் தந்த விதையோ
    இன்று நான் மரமானேன்;
    எத்தனை இன்னல்கள்
    ஏற்ற மரமாக?
    …வாழும் வரை
    உயிர்க்காக;
    வீழும்போது
    உனக்காக!!
    என்னிடம் கற்றுக்கொள்!
    தன்னிடமிருந்து கொடுத்தால்
    தர்மம்!
    தான் மடிந்து கொடுத்தால்
    தானம்!
    சொல்வாயா தாங்கி
    நிற்கும் குழந்தைக்கு?

    இத்தகைய புதுமைச் சிந்தனைகள் தொடர்க!

    ReplyDelete