Jan 17, 2012

எது அரசியல்?

மக்களின்
மாண்பு காக்க
மன்னவன்
தவறினனாயின்
மக்களே
கொதித்தெழுவர்
மானமிகு
தமிழன் மரபில்!

ராபின்சன்
பூங்காவும்,
ராமாவரம்
தோட்டமும்,
இதற்க்கு
விதிவிலக்கல்ல!

ஆனால்
கோபாலபுரமும்,
போயஸ் கார்டனும்,
காட்டும்
நெறிதான்
தன் இலட்சியம்
என உணரும்,
எம் இனம்
சிந்திக்க வேண்டும்!
நாகரிக
அரசியல்
எதுவென்று!!

உன்னை,
உன் வீட்டை,
உன் இனத்தை,
உன் நாட்டை,
அழிக்கும்
எதுவும்
உன்னத
அரசியல்
பண்பாகாது!

தெரிந்துகொள்! தெளிந்துகொள்!                      - சுரேஜமீ

தற்காலத் தமிழன்

அறம் துறந்து
வரும்
ஆக்கம்,

பொய்யுரைத்துத்
தேடும்
புகழ்,

கண்ணியம்
தவறிக்
கிட்டும் பதவி,

நெறி கெட்டு
நடத்தும்
தலைமை,

சக மனிதன்
துயரம்
ஆற்றா
பண்பு,

இன்னும் பல
என்னும்
பட்டியல்
நீளும்
நாளும்..

தட்டிகேட்க
இயலாத
தற்காலத் 
தமிழன் மீது
விழுந்த சாபம்!                                                     - சுரேஜமீ

தானே

வரலாறு
மீண்டும்
நினைவு படுத்தியது
தமிழினத்திற்கு 
1964 புயல் மற்றும்
2004 சுனாமியை
"தானே" யாக!

வெறும் புயல்
தானே என்று
இருந்த
எம் மக்களின்
வாழ்வாதாரத்தை
"தானே "
தாரை
வார்த்துக் கொண்டது,
தனக்குத்தானே!       

தவிக்கிறான்
தமிழன்!
இரு
தலைமுறையாகும்
இவ்விழப்பை
ஈடு செய்ய!
அதுவும்
அரசும்,
தொண்டு நிறுவனமும்,
தொழிலதிபர்களும்,
தன் கரத்தை
நீட்டினால்
மீண்டு வருவான்
மாண்டு போகாமல்!                                             - சுரேஜமீ

Jan 9, 2012

தமிழா! தமிழா!

தமிழா! தமிழா!

நுண்ணறிவின்
பெட்டகமே,
நூற்றாண்டுகள்
கடந்திடுதே,
உன்னிலையை
உணராயோ,
ஒப்பில்லா தமிழினமே!

அடிமையை வீழ்த்திய நீ,
அரசியலில் வீழ்ந்திட்டாய்!
இனத்தினையே
அழித்திட்டாய்!
இன்னும் நீ
உணரவில்லை!

சாதியக் கொடுமையினால்,
சந்தியில் நீ வந்திட்டாய்!
மதமெனும் மலையேறி,
மண்ணில் நீ புதைந்திட்டாய்!
எப்பொழுது மீட்டேடுப்பாய்
உன் மொழிஎன்னும்
அமுதினையே?

இன்னும் என்ன
இழப்பதற்கு?
எழுந்திரு தமிழா!
விழித்திரு நீ தமிழா!
அயராது உழைத்திட்டு
ஒன்று எங்கள் சாதியது
தமிழ்ச் சாதி என்று உரை!
ஒன்று எங்கள் மதமது,
தமிழ் மதமே என்று உரை!
இனமென்ற உணர்வு
இனி எட்டுத்திக்கும்
பரவட்டும்!

தரணியிலே மாந்தர்க்கு
தனியொரு உதாரணமாய்
தமிழனென்ற
சொல்லை நீ, 
ஒற்றை அகராதியாக்கு
ஒப்பில்லா வாழ்வுக்கு!                                - சுரேஜமீ