Jan 9, 2012

தமிழா! தமிழா!

தமிழா! தமிழா!

நுண்ணறிவின்
பெட்டகமே,
நூற்றாண்டுகள்
கடந்திடுதே,
உன்னிலையை
உணராயோ,
ஒப்பில்லா தமிழினமே!

அடிமையை வீழ்த்திய நீ,
அரசியலில் வீழ்ந்திட்டாய்!
இனத்தினையே
அழித்திட்டாய்!
இன்னும் நீ
உணரவில்லை!

சாதியக் கொடுமையினால்,
சந்தியில் நீ வந்திட்டாய்!
மதமெனும் மலையேறி,
மண்ணில் நீ புதைந்திட்டாய்!
எப்பொழுது மீட்டேடுப்பாய்
உன் மொழிஎன்னும்
அமுதினையே?

இன்னும் என்ன
இழப்பதற்கு?
எழுந்திரு தமிழா!
விழித்திரு நீ தமிழா!
அயராது உழைத்திட்டு
ஒன்று எங்கள் சாதியது
தமிழ்ச் சாதி என்று உரை!
ஒன்று எங்கள் மதமது,
தமிழ் மதமே என்று உரை!
இனமென்ற உணர்வு
இனி எட்டுத்திக்கும்
பரவட்டும்!

தரணியிலே மாந்தர்க்கு
தனியொரு உதாரணமாய்
தமிழனென்ற
சொல்லை நீ, 
ஒற்றை அகராதியாக்கு
ஒப்பில்லா வாழ்வுக்கு!                                - சுரேஜமீ

No comments:

Post a Comment