Apr 18, 2015

கவிஞனால்தான் முடியும்! 
காலத்தால் அழிக்க முடியாத கருத்தைச் சொல்வதற்கு!

இந்திய மண்ணின் இரண்டு இதிகாசங்கள் சொல்லும் நீதி, வாழ்க்கை இயம்பட வாழ வழிசொல்லும் ஒப்பற்ற காவியங்கள் என்பது யாவரும் அறிந்ததே!
அதை சொல்லும் விதத்தில், எவ்வகையிலும் சளித்தவர்கள் அல்ல நம் கவிஞர்கள்! 
அதிலும் குறிப்பாக, கவிச் சக்ரவர்த்தி கம்பன், அயோத்தியா காண்டத்தில், மந்திரப் படலத்தில், ஒரு வாழ்த்துப் பா வைக்கிறான்.
அந்த விருத்தத்தில், கடைசி நான்கு வரிகளில், ஒரு காதையின் முழுக்கருத்தையும் சொல்லி விடுகிறான் என்பதை, 
என்னுடைய கோணத்தில் பார்க்க விரும்புகிறேன்.

இதோ அந்த பாடல் வரிகள்:
.......கூனும் சிறிய கோத் தாயும்
கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை!

என்ன சொல்கிறான் கம்பன்? சிந்திப்போமா?

கூனியும், இராமனின் சிறிய தாயான கைகேயியும், செய்த கொடுமையின் விளைவால், அரசாள வேண்டிய இராமன், பட்டத்தைத் துறந்து, கானகம் ஏகிக், கயவர்களின் சூழ்ச்சியால், கட்டின மனைவி சீதையைப் பிரிந்து, ஆற்றொனாத் துன்பத்திற்கு ஆளாகி, அனுமனின் உதவியால், கடல் கடந்து, தன் இமைபோல இருக்கக் கூடிய மனைவி சீதாப்பிராட்டியை துன்பத்திலிருந்து மீட்க, இழிசெயல் புரிந்த இராவணனை அழித்து, வெற்றியை ஈட்டித் தன் மனைவியை மீட்ட வேந்தன் இராமன் என்று

இரத்தினச் சுருக்கமாக, ஈரிரண்டு வரிகளில் யாரால் சொல்ல முடியும்?

கவிஞனால்தான் முடியும்! காலத்தால் அழிக்க முடியாத கருத்தைச் சொல்வதற்கு!

அன்புடன்
சுரேஜமீ

Inline image 1

No comments:

Post a Comment