Nov 13, 2012

வண்ணத்தை மிஞ்சும் வர்ணங்கள்!

குருதியில்
பச்சை உண்டோ?
கருப்பு உண்டோ?
நீலம் உண்டோ?
ஆனால், உனக்கு மட்டும்
ஏதடா
வண்ணத்தை மிஞ்சும்
வர்ணங்கள்?

எவனோ அன்று
பிரித்தாளச் செய்த
சூழ்ச்சியை;
இன்றும் நீ
பிடித்துக் கொண்டு
இருக்கிறாயே
மூடனே!

உன் குருதியி
ன் நிறம்
"ஒன்று" என சொல்லிய
உன் அறிவு;
உனக்குள் எப்படி
விண்வெளி இடைவெளியில்
இப்படி வர்ணத்தை விதைத்தது?

நடந்த தீயவைகளை, 
தலைமுறை; தலைமுறையாக
எடுத்துச் செல்வதைத் தவிர்க்க;

நானிலத்தில் "நாம்" 

எல்லோரும் சமமென்பதற்கு!

1 comment:

  1. //உடலில் பூசிய வண்ணங்களை மிஞ்சும் வகையில் சமூகத்தில் நிலைகொண்டிருக்கும் வர்ணங்களைச் (சாதிகளை) சாடும் திரு. சுரேஜமீயின் வரிகள்…// - அன்புச் சகோதரி மேகலா இராமமூர்த்தி, வல்லமை மின்னிதழ்

    குருதியில்
    பச்சை உண்டோ?
    கருப்பு உண்டோ?
    நீலம் உண்டோ?
    ஆனால், உனக்கு மட்டும்
    ஏதடா
    வண்ணத்தை மிஞ்சும்
    வர்ணங்கள்?

    எவனோ அன்று
    பிரித்தாளச் செய்த
    சூழ்ச்சியை;
    இன்றும் நீ
    பிடித்துக் கொண்டு
    இருக்கிறாயே
    மூடனே!

    ReplyDelete